வடகொரிய அதிபருடன் திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமா ? டிரம்ப் பதில்
வடகொரிய அதிபருடன் திட்டமிட்டபடி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும். இதில், எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதன்பிறகு, இரு நாடுகளுக்கு இடையே சுமூக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, சமீபத்தில் அண்மைக்காலமாக வடகொரி அதிபருடன் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதற்கு டிரம்பும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து வரும் ஜூன் மாதம் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்னர் சந்திப்புக்கு மறுத்தார். இதன் பின்னர், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வட கொரிய அதிபருடனான சந்திப்பை டிரம்ப் உறுதி செய்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஏற்கனவே திட்டமிடப்பட்டது போல், வரும் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபருடனான சந்திப்பு நடைபெறும். இதற்காக, நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். இதில், நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com