தனக்கான இடம் இதுவல்ல: கீர்த்தியின் பளீச் பதில்

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகைவர் கீர்த்தி சுரேஷ். பின்னர், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, இளைய தளபதி விஜயுடன் பைரவா திரைப்படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

இப்படி படிப்படியாக அடிவைத்து உயர்ந்து வரும் கீர்த்திக்கு நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை சரியாக உபயோகித்தார் கீர்த்தி. படம் வெளிவந்த பின்னர் புகழின் உச்சிக்கே அவர் சென்றுவிட்டார். நடிகையர் திலகம் படத்தில் அவரது வெளிப்படையான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவரிடம் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கான இடம் எது? என்று கேட்டதற்கு, "நடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு புது அனுபவத்தை உணர்ந்து வருகிறேன். எனக்கான ரயில் நிலையத்தை எப்போது காண்பேன் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

நயன்தாரா, திரிஷா இருவரும் முன்னணி நடிகைகளாக நிரூபித்துவிட்டனர். இருவரும் முதலில் வணிக ரீதியான திரைப்படங்களில் நடித்தனர். அதனால் அவர்கள் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேடித்தேடி நடித்துவருகின்றனர்.

அது அவர்கள் வழி. எனக்கு அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. நான் இப்போது தான் வளர்ந்து வரும் நடிகை, எனக்கான இடத்தை தீர்மானிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. என்னை முன்னணி நடிகை என நிரூபிக்க கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன்" என்று புன்னகையுடன் பதிலளித்தார் நவீன நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>