தூத்துக்குடி துப்பாக்கி சூடு... வாய்திறந்த அமித்ஷா!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டிருப்பதாக என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கங்களை மத்திய உள்துறைக்கு அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில விளக்கங்களை கேட்டிருக்கிறார். விளக்கங்களை எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சம்பவத்தை கையாண்ட முறை சரியில்லை. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் இது நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறியிருந்தார். மேலும், தாம், 18 மாதங்களுக்கு முன்தாக இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘அமித் ஷாவின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கப் பார்ப்பதாகவும்’ குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>