பாபா ராம்தேவின் அடுத்த மூவ்.. விரைவில் புதிய சிம் கார்டு விற்பனை
பாபா ராம்தேவின் விற்பனை வரிசையில் பதஞ்சலி பொருட்களை தொடர்ந்து தற்போது புதிய சிம் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளனர். இது விரைவில் பொது விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றனர். ஜியோவின் அதிரடி ஆப்பர்களால், தாக்குப்புடிக்க முடியாமல் நஷ்டத்தில் விழுந்த ஏர்செல் நிறுவனம் வெளியேறியது.
தொடர்ந்து, ஜியோ பக்கம் செல்லும் வாடிக்கையாளர்களை இழுத்துப் பிடித்து தக்க வைத்துக் கொள்ளும் வகையில், ஏர்டெல், வோடப்போன் ஆகிய நிறுவனங்கள் ஆப்பர்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜியோவிற்கு போட்டியாக பாபா ராம்தேவ் சுதேசி சம்ரித்து என்ற சிம் கார்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பதஞ்சலி நிறுவனம் இணைந்து புதிய சிம் கார்டை வெளியிட்டுள்ளது. இந்த சம்கார்டில் ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா கிடைக்குமாம். இத்துடனம், சிம் கார்டு வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடும் செய்து தரப்படுகிறது.
இந்த சிம் கார்டு, தற்போது சோதனை ஓட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொது விற்பனைக்கு வரும் என்றும், அப்போது சிம் கார்டு வாங்குபவர்களுக்கு பதஞ்சலி பொருட்களில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com