கோள்கள், நட்சத்திரங்களை அழிக்கும் மிகப்பெரிய கருத்துளை கண்டுபிடிப்பு!
மிகப்பெரிய கருத்துளை ஒன்று பால்வெளி மண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிலி நாட்டின் லாஸ் கம்பனாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, விண்வெளி ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பெரிய அளவிலான இந்தப் புதிய கருத்துளையானது “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருத்துளைகளைவிட 80 கோடி மடங்கு பெரியதாக இருக்கிறது” என்று ஆய்வுக்கூட விஞ்ஞானி எட்வர்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கருத்துளை பூமியில் இருந்து 130 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவரும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவை இந்த கருத்துளைக்குள் சென்றால் அழிந்துவிடும் என்று நம்பப்படுகின்றது.
கருத்துளையைப் பற்றி கூறிய பிரபால விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் “கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், அதன் முடிவில்லா ஈர்ப்புவிசையின் காரணமாக அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும். அதன் ஈர்ப்புவிசையிலிருந்து ஒளி கூட தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வருவது எதுவானாலும் அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று அழிந்துவிடும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.