ஸ்டெர்லைட் வெற்றி உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம்: ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து எடுத்த நடவடிக்கை, போராட்டத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதன் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் துணை முதல்வர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசானை வெளியிட்டது. தொடர்ந்து, சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரசியர்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், “போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>