வெள்ளப் பெருக்கில் சிக்கியது அமெரிக்காவின் எலிகாட் சிட்டி !
அமெரிக்கா, மேரிலேண்ட் ஹோவர்ட் கவுண்டியில் கன மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எல்லிகாட் சிட்டி மற்றும் பால்டிமோரில் இரண்டு மணி நேரத்துக்குள் 6 அங்குல அளவு மழை பெய்துள்ளது. சில இங்களில் 3 மணி நேரத்துக்குள் 10 அங்குல அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெள்ளம் நகரத்துக்குள் புகுந்துள்ளது. ஞாயிறன்று மாலை மேரிலேண்ட் ஆளுநர் எல்லிகாட் சிட்டியில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இரண்டாம் அல்லது மூன்றாம் தளங்களுக்கு சென்று விட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளன என்ற தகவலையும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளப்பெருக்கின் காரணமாக, நகரத்தில் தென்கிழக்கே உள்ள பாடாப்ஸ்கோ நதியின் நீர்மட்டம் 17 அடி உயர்ந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமுற்றிருந்த பகுதிகள் இன்னும் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரும்பவும் பெருவெள்ளப்பெருக்கு நகரத்தை மூழ்கடித்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com