சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 4 மாணவர்கள் முதலிடம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழவதும் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ மாணவிகள் எழுதினார்கள்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வில், 499 மதிப்பெண் எடுத்து நான்கு மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.அதாவது, அரியானா மாநிலம் குருகிராமடை சேர்ந்த ப்ராகர் மிட்டல், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ரிம்ஷிம் அகர்வால், ஷாம்லியை சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரளா கொச்சியை சேர்ந்த ஸ்ரீலட்சுமி ஆகிய நான்கு பேரும் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

மண்டல வாரியான தேர்வு முடிவில், திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 97.37 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும், அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டுக்கான 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>