காலா டிரைலர் வெளியான ஒரே நாளில் 3.1 மில்லியன் வியூவ்ஸ்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காலா படத்தின் டிரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
பா.ரஞ்ஜித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ஜூன் 7ம் தேதி வெளிவர இருக்கும் படம் காலா. கபாலிக்கு பிறகு ரஞ்ஜித்&ரஜினி கூட்டணி காலா மூலம் மீண்டும் இணைந்துள்ளது.தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள காலா, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காலா படத்தின் பர்ஸ் லுக், டீசல், படல்கள் வெளியான நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு காலா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் இதுவரை 3.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
காலா படத்தின் டிரைலர் இதோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com