பழி சொல்லி தப்பிக்கும் அரசியல் வேண்டாம் - ரஜினி
பிறரை பழித்துக் கொண்டே இருந்தால் அரசியலில் முன்னேற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலவரத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்ப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டார்.
இதன் மூலம் அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக, முதன் முறையாக மக்கள் பிரச்னையில் களம் இறங்குகிறார் நடிகர் ரஜினி.
முன்னதாக போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் பின்னோக்கி பார்த்தால் முன்னேற முடியாது” என்றார். அப்போது, திமுக சட்டப்பேரவை புறக்கணிப்பு, போட்டி சட்டசபை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com