கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட தடை
ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை விதித்து திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
பா.ரஞ்ஜித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. காலா படத்தின் டிரைலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் காலா வெளியாக இருக்கும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வெளியிடுவதற்கு மட்டும் திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து அறிவித்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என்றும் காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காலா படம் வெளியாவதற்கு தடை விதித்து திரைப்ப வர்த்தக சபை அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com