15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த மறுநாள் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாளுக்கு நாள் உயர்ந்து மக்கள் எதிர்பாராத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 15 காசு உயர்ந்து ரூ.81.26 ஆகவும், டீசல் விலை 11 காசு உயர்ந்து ரூ.73.3 ஆகவும் இருந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 நாட்களுக்கு பிறகு இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து ரூ.80.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு குறைந்து ரூ.72.58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com