138 பெண்கள் பலாத்காரம் செய்த அமெரிக்க டாக்டருக்கு 60 ஆண்டு சிறை
வாஷிங்டன்: அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மருத்துவர் லார்ரி நாசர் என்பவருக்கு 138 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மிச்சிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஒலிம்டிக் குழு உறுப்பினர் லார்ரி நாசர் (54). இவர், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது, தன்னிடம் உடல் பரிசோதனைக்காக வரும் சிறுமிகளுக்கு நாசர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளா£ர். மேலும், சிறுமிகளை நிர்வாண படம் எடுத்தும் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதுதொடர்பான புகார்கள் நாசர்க்கு எதிராக குவிந்தது. இந்நிலையில், மிச்சிகன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி உள்பட 140 பெண்கள் நாசர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கடந்த புதன்கிழமை மிச்சிகன் மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாசரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சிறுமிகளை நிர்வாண படம் எடுத்ததில் 3 வழக்குகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்காக தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, நாசர் மீது செக்ஸ தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு வரும் ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.