இந்தியப் பங்குச்சந்தையுடன் முட்டிக்கொண்ட சிங்கப்பூர்!
சிங்கப்பூர் பங்குச்சந்தை மற்றும் இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரு பெரும் சந்தைகளுக்கு இடையே சிக்கலான போக்கு நிலவி வருகிறது.
இதையடுத்து இந்தியப் பங்குகளின் விற்பனை அறிமுகத்தை ஒத்திவைப்பதாக சிங்கப்பூர் பங்கு வர்த்தக மையம் அறிவித்தது. கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரின் முக்கியப் பங்குதாரர்கள் அவரவர் பங்குகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது என்றொரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அறிவித்தனர்.
ஆனால், சிங்கப்பூர் பங்குச்சந்தை வருகிற ஜூன் மாதம் இந்தியாவுக்கான புதிய பங்குகளை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுகுறித்து இந்தியப் பங்குச்சந்தை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.
வழக்கில், இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை வர்த்தக மையம், ‘சிங்கப்பூரின் சார்பில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் பங்குகள் இந்திய குறியீட்டு சேவை மற்றும் தயாரிப்புகள் கீழ் வரும் விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளதாகக் கூறியுள்ளது. இதற்கு சிங்கப்பூர் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com