காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!- ரஜினி
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஒரு நடிகனாக மக்கள் தன்னைச் சந்தித்தால் மகிழ்வர் என்ற பேட்டியுடன் தூத்துக்குடி பயணமானார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் விமர்சகர்கள் பலரும் இது ரஜினியின் அரசியல் ஸ்டன்ட் என்றே விமர்சித்தனர்.
இதையடுத்து இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிய பின்னர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது, “தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் போலீசை அடித்தது, ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பை எரித்தது சமூக விரோதிகள்தான்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com