வில்லிவாக்கம் உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த விபரீதம்: சிறுவன் பலி
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது தம்புள்ஸ் தலையில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மோகன். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 11ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.
கோடை விடுமுறை என்பதால் மோகன், வில்லிவாக்கம், நாதமுனி, அகத்தியர் நகரில் உள்ள வி&லிப்ட் என்கிற உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயிற்சி செய்து வந்தார்.இந்நிலையில், மோகன் வழக்கம்போல் நேற்று மாலை உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்மிற்கு சென்றுள்ளார். அப்போது, தம்புள்ஸ் தூக்கி பயிற்ச்சியில் ஈடுபட்டபோது, வெயிட் தாங்காமல் தடுமாறி விழுந்த மோகன் தலையில் தம்புள்ஸ் விழுந்தது.
இதில், படுகாயமடைந்த மோகனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பயிற்சி கூடத்தில் உரிமையாளர், பயிற்றுனரின் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்புள்ஸ் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com