ரஜினிகாந்த் ஒரு மாவீரன்- பொங்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!
’ரஜினிகாந்த் ஒரு மாவீரன்’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழ்ந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஒரு நடிகனாக மக்கள் தன்னைச் சந்தித்தால் மகிழ்வர் என்ற பேட்டியுடன் தூத்துக்குடி பயணமானார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் விமர்சகர்கள் பலரும் இது ரஜினியின் அரசியல் ஸ்டன்ட் என்றே விமர்சித்தனர்.
ரஜினிகாந்த் காவல்துறைக்கு ஆதரவாகவும், தனது அரசியல் வரவுக்காக நாடகம் ஆடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை புகழ்ந்துள்ளார்.
அதாவது, ’ரஜினிகாந்த் ஒரு மாவீரன்’ என அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் நடிகர் மயில்சாமி, “ரஜினி மட்டுமா மாவீரன்? மற்றவர்கள் எல்லாம் கோழையா? நானும் மாவீரனே” என கேலி செய்யும் வகையில் கடுமையாகத் தாக்கி விமர்சித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com