காவிரியை தமிழகம் இழந்து வருகிறது- கொந்தளித்த ஸ்டாலின்
’காவிரி மீதான உரிமையை தமிழகம் இழந்து வருகிறது என இன்று திமுக-வின் சார்பில் நடத்தப்பட்ட மாதிரி சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொந்தளித்தார்.
நூற்றாண்டுகளைக் கடந்தும் காவிரி பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அண்மையில், காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடந்த மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “காவிரியில் தமிழக உரிமை பறிபோய் வருகிறது. காவிரி ஆணையம் அமைக்காமல் இன்னும் தாமதம் செய்வது பாஜக-வின் பச்சை துரோகம்.
ஜூன் 12 க்குள் மேட்டூர் அணை திறக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும்” என சில தீர்மானங்களையும் ஸ்டாலின் இன்று மாதிரி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com