வாராக்கடன் பிரச்னையால் தவிக்கும் பொதுத்துறை வங்கிகள்!
இந்தியாவின் ஐந்து தேசிய வங்கிகளின் வாராக் கடன் ரூபாய் 45,680 கோடியாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டு வரை ஆடிட் செய்ததில் இந்த திடுக்கிடும் வாராக் கடன் அளவு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 5 தேசிய வங்கிகளுடன் ஐடிபிஐ வங்கியையும் சேர்த்துக் கொண்டால், மொத்த வாராக் கடன் அளவு இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாராக் கடன் அதிகரிப்பு வங்கித் துறைக்கு பேரிடியாக அமைந்துள்ளது. காரணம், மொத்தம் அரசு கட்டுபாட்டில் இருக்கும் 22 வங்கிகளில் சரி பாதி வாராக் கடன் அதிகரிப்பு காரணமாக ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.
வாராக் கடன் அளவை கட்டுபடுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நிலைமை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் முத்ரா, `ரிசர்வ் வங்கி வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுபடுத்த பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த விதிமுறைகளால் பல வங்கிகள் வருமானம் ஈட்டத் திணறி வருகின்றன' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com