இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #நான்தான்பாரஜினிகாந்த் !

தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சம்பவங்களை கொண்டு இந்திய அளவில் #நான்தான்பாராஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ரஜினி, தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முதல்முறையறாக இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வந்தவர்களை ரஜின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுனார்.

அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், யார் நீ ? எங்கிருந்து வந்தாய் ? என்று கேட்டதற்கு நான் ரஜினி.. சென்னையில் இருந்து வருகிறேன் என்று ரஜினி கூறினார். சென்னையில் இருந்து தூத்துக்குடி வருவதற்கு 100 நாட்கள் ஆனதா என்று ரஜினியை பார்த்து கேட்ட அந்த இளைஞர் ஆவேசமடைந்தார். இதற்கு ரஜினி பதிலளிக்காமல் அங்கிருந்த சென்றார்.

இந்நிலையில், 100 நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த நிலையில், ரஜினி தூத்துக்குடி சென்ற  இந்நிகழ்வைக் கொண்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>