கேரளாவில் நிபா காய்ச்சலால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கேரளாவில், நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் அறிகுறி இருக்கும் மக்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இருப்பினும், நிபா வைரஸ் காய்ச்சல் தாக்குதலால் இதுவரை இரண்டு செவிலியர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் (55) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம், நிபா காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்த காய்ச்சலுக்கு நம் நாட்டில் இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com