சீனர்களுக்கு விசா அனுமதி காலம் குறைப்பு - அமெரிக்கா அதிரடி

ஜூன் மாதம் முதல் சீனர்களுக்கு வழங்கப்பட இருக்கும் விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கக்கூடிய காலம் குறைக்கப்பட உள்ளது. அமெரிக்கா வெளிநாட்டு பணியாளர்களுக்கு, பணியாளர்களின் குடும்பத்தினருக்கு விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஹெச்-1 பி விசா பெற்றுள்ள உயர்திறன் தொழில்நுட்ப பணியாளர்களின் ஹெச்-4 விசா பெற்றுள்ள கணவர் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற ஒபாமா அரசு வழங்கியிருந்த அனுமதியை தற்போதைய அரசு ரத்து செய்ய உள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சீனர்களுக்கு வழங்க இருக்கும் அமெரிக்க விசாவிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. விசா வழங்கும் நடவடிக்கை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரும். ஆனால், விசாவுக்கு பொருந்தும் முழு காலமும் விசாதாரர் தங்கியிருப்பதில் மாறுதல் கொண்டு வரப்படும். அதன்படி, எவ்வளவு காலம் விசா செல்லுபடியாகும் என்பதை அமெரிக்க தூதரகம் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் உயர் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு விசா வழங்கப்படும். அமெரிக்க வர்த்தக துறை அட்டவணையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் பணியமர்த்தும் சீனர்கள், பல்வேறு அமெரிக்க துறைகளின் அனுமதியை பெற்றே தங்கியிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>