மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசனை

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் இதடையே முதல் சேவையை தொடங்கியது. இதற்காக, ரூ.14 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2009ம் ஆண்டில் பணி தொடங்கப்பட்டது.

இதன் பிறகு, சின்னமலை - விமானநிலையம், ஆலந்தூர் - பரங்கிமலை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே படிப்படியாக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது.இதைதொடர்ந்து, கடந்த 25ம் தேதி நேரு பூங்கா - சென்டிரல், சின்னமலை - தேனாம்பேட்டை ஏ.ஜி. & டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அன்று முதல் ஐந்து நாட்களுக்கு பொது மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஆனால், இலவச பயணம் முடிந்த நிலையில், மெட்ரோ ரயில் வெறிச்சோடி காணப்படுகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்க ரூ.70 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது தான் மக்கள் வரத்து குறைந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதைதொடர்ந்து, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>