பாபா ராம்தேவின் சிம் கார்டை தொடர்ந்து புதிய மெசேஜிங் ஆப் !

பாபா ராம்தேவ் சமீபத்தில் புதிய சிம்கார்டை அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து, வாட்ஸ் போன்ற புதிய மெசேஜ் ஆப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பாபா ராம்தேவ் சுதேசி சம்ரித்து என்ற சிம் கார்டை விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.. பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பதஞ்சலி நிறுவனம் இணைந்து இந்த புதிய சிம் கார்டை வெளியிட்டுள்ளது. இந்த சிம்கார்டில் ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா கிடைக்குமாம்.

இத்துடனம், சிம் கார்டு வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடும் செய்து தரப்படுகிறது. இந்த சிம் கார்டு, தற்போது சோதனை ஓட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சிம் சார்டை தொடர்ந்து, வாட்ஸ் ஆப் போன்று கிம்போ என்ற மெசேஜ் ஆப்பை பாபா ராம் தேவ் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த தகவலை பதஞ்சலி செய்தி தொடர்பாளர் திஜாராவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆப், சுதேசி சம்ரிதி சிம்கார்டு நடைமுறைக்கு வந்த பிறகு செயல்படத் தொடங்கும் என்றும் வாட்ஸ் ஆப் போன்று இதில் மெசேஜ்களை ஒருவருக்கொருவர் இலவசமாக பரிமாறி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>