நெதர்லாந்து ராணி இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு

நெதர்லாந்து ராணி மாக்ஸிமா கடந்த திங்கள் கிழமை இந்தியாவுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்காக வந்தார். இவர் இன்று காலை மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையம் சென்றார்.

அங்கு இருப்பிடம் கொண்டுள்ள மும்பை டப்பாவாலாக்களிடம் உலகப் பிரசித்தி பெற்ற இந்த முறையை எப்படி சரியாகச் செய்து முடிக்கிறார்கள் என வியந்து கேட்டறிந்தார் ராணி.

நெதர்லாந்து ராணி மாக்ஸிமாவை மேள தாளங்களுடன் மும்பை டப்பாவாலாக்கள் தயாராக இருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மேள தாளத்துக்கு ராணியின் பாதுகாவலர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பாரம்பரியம் மிக்க மஹாராஷ்டிரிய வரவேற்பு முறையில் ராணி மாக்ஸிமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுமார் 30 நிமிடங்களுக்கு 150 டப்பாவாலாக்கள் உடன் பேசினார் ராணி மாக்ஸிமா. ராணி மாக்ஸிமாவுக்கு சாப்பாடு டப்பாக்கள் வைக்க உபயோகப்படுத்தப்படும் மரத்தால் ஆன கூடையை டப்பாவாலாக்கள் தங்களது சங்கம் சார்பில் பரிசாக அளித்தனர்.

இந்த டப்பாவாலாக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ராணி மாக்ஸிமா ஆர்வத்துடன் கேட்டறிந்தார். 5000 டப்பாவாலாக்கள் இணைந்து தினமும் மதியம் சுமார் 2 லட்சம் சாப்பாட்டு டப்பாக்களை மும்பை முழுவதும் விநியோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>