நாட்டில் முதன்முறையாக ஹெலிகாப்டர் கொண்டு அனைக்கப்பட்ட தீவிபத்து
டெல்லியில் முக்கியப் பகுதியான மாலவியா நகரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அருகாமையில் பரவிவிடாமல் இருக்கவும் அருகில் பள்ளி கட்டடமும் இருப்பதால், அதற்கும் பரவிவிடாமல் இருப்பதற்காகவும் இன்று காலையில் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவில் இந்திய மேற்கு விமானப்படை தளத்துக்கு டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கானப் பணிகளை செய்ய அவசரமாக வரவழைக்கப்பட்டன. நேற்று மாலையிலேயே 80 தீ அணைப்பு வண்டிகள் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டன.
இரவு முழுவதும் போராடியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் த்வித்து வந்தனர். இதையடுத்தே தீ விபத்து மேலும் பெரிய விபத்து ஆகாமல் தவிர்க்க நள்ளிரவில் அழைப்பு விடுத்து அதிகாலையில் தீயை அணைக்க ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
யமுனையில் இருந்து நீர் எடுத்துக்கொண்டு இன்று அதிகாலையில் டெல்லி மாலவியா பகுதியில் வந்து ஹலிகாப்டர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. பல அடுக்கு தொட்டிகள் நிறைந்த இந்த ஹெலிகாப்டர் மூலம் சுமார் 8ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஒரு நகர்ப்புற பகுதியில் அதுவும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் இத்தகைய பெரும் விபத்து ஏற்பட்டதால் முதன்முறையாக தீ அணைப்பு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com