ப்ரோ கபடி லீக்- கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள்

2018-ம் ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் தொடரின் முதல் நாள் ஏலத்திலேயே சர்வதேச வீரர்கள் மற்றும் உள்ளூர் இந்திய வீரர்கள் எனப் பலரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

முதல் நாள் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக சதனை படைத்துள்ளார் மோனு கோயத். ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிக்காக சரியாக 1.51 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் மோனு கோயத்.

இதேபோல் யூ மும்பாஸ் அணியின் நட்சத்திர வீரர் இரானைச் சேர்ந்த ஃபேசல் அட்ராசலியின் ஏலத் தொகை 30 லட்சமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.

இந்த நட்சத்திர திறமையாளரான ஈரானிய வீரர் அட்ராசலியை ஏலம் எடுக்க ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யூ மும்பா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்த ஈரானிய நட்சத்திரம் யூ மும்பா அணியாலேயே ஏலம் எடுக்கப்பட்டார்.

இதற்கு அடுத்தார் போல், ஒரு கோடி ரூபாய் மைல் கல்லை எட்டிய வீரர்களாக தீபக் நிவாஸ் ஹூடா மற்றும் நிதின் தோமர் ஆகிய இரண்டு வீரர்கள் உள்ளனர். இதில் தீபக் நிவாஸ் ஹூடா ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியாலும் நிதின் தோமர் புனேரி பல்தான் அணிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் அவரவர் அணியின் சார்பாக 1.15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>