ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஏராளமான வதந்தி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்டெர்லை ஆலை மாசுவால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீங்கு ஏற்படுத்தும் மாசு இருந்தால், அதனை அகற்றுவதற்கான வழிகள் குறித்து நிபுணர் குழு உடனடி ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆலையை மூடினால், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், முற்போக்கான ஆட்சியை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் நடத்திய தொடர்போராட்டமும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் மக்கள் மத்தியில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நேரத்தில் இப்படிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>