விரைவில் தொடங்குகிறது பிகேஎல்! இது கபடிக்கான ஐபிஎல்!

ப்ரோ கபடி லீக் தொடர் 2018 ஆறாம் அத்தியாயத்தில் மொத்தமாக 422 வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் உள்ள வீரர்களில் 14 நாடுகளைச் சேர்ந்த 58 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் 87 பேர் நாடு முழுவதும் நடைபெற்ற சிறந்த கபடி வீரர்களுக்கான தேடுதல் வேட்டையில் ‘எதிர்கால கபடி நாயகர்கள்’ என்ற போட்டியின் மூலம் 18 நகரங்களைச் சேர்ந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறும் ப்ரோ கபடி லீக் தொடரில் புதிதாக ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ‘இறுதி ஏலப் போட்டி’. இந்த திட்டத்தின் அடிப்படையில் தொடரின் இறுதி நாள் அன்று தொடரில் விளையாடும் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியைச் சேர்ந்த சிறப்பான இரண்டு வீரர்களை நல்ல தொகை கொடுத்து மீண்டும் அடுத்த ஆண்டுக்கான தொடருக்கு ஏலம் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

வருகிற தொடரில் நடக்க உள்ள இந்த ஏல தேர்தலில் ஒன்பது அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் தக்கவைக்கப்பட உள்ளனர். மேலும், யூ மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யூபி யோதா ஆகிய மூன்று அணிகள் மட்டும் யாரையும் தக்கவைத்துக்கொள்ள விரும்ப வில்லை என்றும் அடுத்த ஆண்டுக்கான தொடரில் வீரர்களைப் பதிதாகவே ஏலம் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>