தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் ஆளும் பாஜக!
539 உறுப்பினர்கள் கொண்ட நாட்டின் மக்கள் அவையான லோக் சபாவில் பெரும்பான்மையுடன் திகழந்து வந்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆனால், இன்றைய சூழலில் வெறும் 272 எம்.பி-க்கள் என்ற நிலையில் தன் உறுப்பினர்களை இழந்து வருகிறது பாஜக. ஆனாலும் நூல் இழை பெரும்பான்மையுடனே இன்னும் காலம் நகர்த்தி வருகிரது பாஜக அரசு.
லோக்சபாவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மொத்தம் உள்ள 543 இடங்களில் நான்கு தொகுதிகளில் எம்.பி சீட் காலியாக இருப்பதால் தற்போது சபையில் 539 உறுப்பினர்களே உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள மூன்று தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவி விலகியதாலும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனந்த்நாக் தொகுதியில் கடந்த மே மாதம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் அந்த தொகுதிக்கான உறிப்பினர் இடம் காலியாக உள்ளது. இதனால் லோக்சபாவுக்கான பெரும்பான்மை 270 ஆக இறங்கியுள்ளது.
ஆனால், ஆளும் பாஜக அரசுக்கு கூடுதலாக இரண்டு நியமன உறுப்பினர்கள் இருப்பதால் மொத்தமாக 274 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் கீழ் சபையை பெரும்பான்மையுடன் நடத்தி வருகிறது.
இந்த இரண்டு நியம்ன உறுப்பினர்களுள் ஒருவர் ஆங்கிலோ- இந்தியன் வகுப்பைச் சேர்ந்த நடிகர் ஜார்ஜ் பேக்கர். இவர் பாஜக சார்பாக மேற்கு வங்க தொகுதியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நியமன உறுப்பினராக கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்டு ஹே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com