மோடி படித்தவரா?- தாக்கும் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்!
"மக்கள் நல்ல படித்த பிரதமர் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் டாக்டர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமரை மக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள்ளார்.
டாக்டர் மன்மோகன் சிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் மன்மோகன் சிங் பாடம் கற்பிக்கும் பேராசியராகப் பணியாற்றி உள்ளார்.
கூடுதலாக இந்திய நாட்டின் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் மன்மோகன் பணியாற்றியுள்ளார்.
இவரைப் போன்ற படித்த பிரதமரை நாட்டு மக்கள் இழந்துள்ளனர். மக்களுக்கு பிடித்த பிரதமர்தான் தேவைப்படுவார்” என வால் ஸ்ட்ரீட் இதழில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்தார்.
மேலும், கெஜ்ரிவால் எப்போதும் பிரதமர் மோடியில் கல்வித்தகுதி குறித்த கேள்விகளை அடிக்கடி எழுப்பி சர்ச்சையை அதிகரிப்பவர். மோடி பட்டம் பெற்றுள்ளாரா என்பதே சந்தேகம்தான் பரபரப்பைக் கூட்டியவரும் கெஜ்ரிவால்தான்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி தேர்தலின் போதும் சரி, அதன் பின்னரான லோக் சபா தேர்தலின் போதும் சரி, பிரதமர் மோடியின் மீதான எதிர்மறை விமர்சனங்களை அளவுக்கு அதிகமாக முன்வைத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com