இனி கண்ணாடிக்குப் பதில் கேமிரா! இது ஆடியின் புது வரவு!
வழக்கமாக கார்களின் பக்கவாட்டுச் சாலையைப் பார்பதற்காக அமைக்கப்படும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்குப் பதிலாக இனி கேமிராக்கள் பொருத்தப்பட்டு புதிய ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளது ஆடி நிறுவனம்.
ஜெர்மன் நிறுவனமான ஆடி, வருகிற ஆக்ஸ்ட் 30-ம் தேது புது வகை ஆடி இ-ட்ரான் வகை கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனத்தார் சுமார் 1000 மணி நேரம் செலவழித்து இதற்கான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இதன்படி முற்றிலும் மாறுபட்ட புதிய அம்சங்களுடன் களம் இறங்க உள்ள புதிய வகை ஆடி கார்களில் 2.6 மெகாவாட் திறனுள்ள ஃபேன் மூலம் வெளிப்படும் காற்றின் வேகத் திறன் மணிக்கு 299 கிமீ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்ளேயே கேமிரா மூலம் பக்கவாட்டு பார்வை அமைக்கப்படும் என்பதால் காரின் வெளிப்புறம் பக்கவாட்டுக் கண்ணாடிகள் பொருத்தப்படப்போவது இல்லை. இதனால் வண்டியின் அகலம் 150ம்ம் வரை குறைந்து காற்றின் வேக சத்தத்தைக் குறைக்கும் என்றும் ஆடி நிறுவனம் கூறியுள்ளது.
எலெக்ட்ரிக் எஸ்யூவி வகை கார் ஆக அறிமுகமாகும் இந்த ஆடி இ-ட்ரான் இதனது மூத்த நிறுவனமான வோக்ஸ்வேகனின் எம்.க்யூ.பி தரைத்தள அமைப்பையே பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆடி இ-ட்ரான் 500 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாகியுள்ளது.