விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமெரிக்க மாணவர்கள்!

பாய் பிளாக் நைட்ஸ் என்கின்ற சிறுவர்கள் ரக்பி அணி, தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை வென்றுவிட்டு அவர்களின் இருப்பிடத்துக்கு வாகனத்தில் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற நெடுஞ்சாலையின் தூரத்தில் ஒரு கார் குப்புற கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர். உடனே அங்கு இறங்கி சென்ற 13 அல்லது 14 வயதே நிரம்பிய சிறுவர்கள், இரண்டு முதியவர்கள் காரில் அடிபட்டு வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். 

இதையடுத்து, ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்களை காப்பாற்ற ஒன்றிணைந்தனர் சிறுவர்கள். இருவரும் என்ன செய்தும் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், காரை புரட்டிப் போடுவது தான் ஒரே வழி என்று முடிவு செய்துள்ளனர். சற்றும் தயங்காமல், அனைவரும் சேர்ந்து காரை புரட்டிப் போட்டு சிக்கி இருந்த மூதாட்டியைக் காப்பாற்றினர். 

இதையடுத்து விபத்தில் சிக்கி இருந்தவர்கள் ஹார்ட்மேன் தம்பதியர் என்றும், எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்தது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹார்ட்மேன், `அவர்கள் எங்களைக் காப்பாற்ற வந்திருக்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. நாங்கள் சிக்கியிருப்பதைப் பார்த்த அடுத்த கணம் எந்த வித தயக்கமுமின்றி காப்பாற்றுவதற்கு காரையே புரட்டிப் போட்டுவிட்டனர்' என்று நன்றியுடன் கூறியுள்ளார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>