கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து!
திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
எனினும், கோபாலபுரத்தில் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க குவிந்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளார்.
அதில், கலைஞர் கருணாநிதிஜிக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞன், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளராக இருப்பவர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் கருணாநிதி ஜி ஒருவர்” என்றும்,
“தொடர்ந்து, அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்” என்றும் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com