இந்தியா உடன் இணையும் அமெரிக்கா! கடுப்பில் சீனா!

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி அங்கேயே அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸை சந்தித்தது அமெரிக்க- சீன உறவில் இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ளது.

இருநாட்டுப் பாதுகாப்பு குறித்தும் சர்வதேச கடலோரப் பாதுகாப்பு குறித்தும் இரு தலைவர்களும் கலந்து உறையாடியதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் உடன் இருந்தார். அதன் பின்னர் தனது சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார்.

மோடி குறிப்பிடுகையில், ”இந்தியாவும் சீனாவும் நம்பிக்கையுடன் தீர்க்கமாக இணைந்து பணியாற்றினால் நிச்சயமாக ஆசியா மட்டுமல்லாது இந்த உலகத்துக்கும் சிறந்த எதிர்காலம் அமையும். இரு நாடுகளும் பரஸ்பர விருப்பங்களையும் வேண்டுகோள்களையும் அறிந்து செயல்பட்டால் சிறப்பானதாக இருக்கும்.

கடல் பரப்பைப் பொறுத்த வரையில் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கடல் மட்டுமல்லாது வான் வெளியிலும் சரி சமமான உரிமையைப் பெறுவதற்கு வணிகம் மற்றும் அமைதியின் ரீதியிலான உடன்படிக்கைகள் வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>