வெளிநாட்டுப் பணமா? இனி அரசு கண்காணிக்கும்!

இந்திய அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகள் மூலம் வரும் வருவாய் குறித்து அறிந்துகொள்வதற்காகவும் அவற்றை மேற்பார்வை இடுவதற்காகவும் புதிய மென்பொருள் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தப் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் அமைச்சகத்திலும் இனி வரும் காலங்களில் வெளிநாட்டு நிதி உதவிகள் குறித்தும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு குறித்தும் எளிதாக அரசு அறிந்துகொள்ள முடியும்.

வெளிநாட்டு பங்களிப்புக் கட்டுப்பாடு சட்ட விதிமுறை 2010-ன் கீழ் விதிமுறைக்கு உட்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்” எனக் கூறினார். ’தகவல்களைத் தேடித் திரட்டுவதிலும் ஆராய்வதிலும் இந்தப் புதிய மென்பொருளின் பங்களிப்பு அதிகமானது.

வெளிநாட்டு பங்களிப்புக் கட்டுப்பாடு’ சட்ட விதிமுறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் இனி இந்தப் புதிய மென்பொருளோடு இணைக்கப்படும்’ என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>