பண மோசடி வழக்கில் சிக்கிய குஜராத் நிறுவனம்: அமலாக்கத்துறை விசாரணை
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருத்து தயாரிக்கும் நிறுவனமான ஸ்டெர்லிங் பண மோசடியில் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளது.
ஸ்டெர்லிங் மருந்து நிறுவனத்தின் குஜராத் மாநில கிளை முதலில் வங்கி பண மோசடி வழக்கில் சிக்கியது. இதையடுத்து, அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையால் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மும்பை மற்றும் அஹமதாபாத் கிளைகளின் சொத்து உரிமையையும் முந்தைய வழக்கோடு இணைக்கப்பட்டுள்ளது
ஆந்திர வங்கியின் கீழ் இயங்கக்கூடிய வங்கிகளில் ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனம் பெற்ற 5ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாராக்கடனாக தேங்கி உள்ளது. சென்ற 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையில் இந்நிறுவனத்தின் கடன் பாக்கித்தொகை ஆனது 5,383 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையின் அடிப்ப்டையிலேயே சிபிஐ வழக்கும் பதிவு செய்துள்ளது.
கடந்த 2008-09 ஆகிய ஆண்டுகளில் இடைப்பட்ட காலங்களில் சந்தேசரா சகோதரர்களால் ஆந்திர வங்கியின் இயக்குநர் கார்க் என்பவரது பெயரில் 1.52 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துரை ஸ்டெர்லிங் நிறுவன சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com