கலவர பூமியான ஷில்லாங்! இணைய சேவை முடக்கம்!

வட கிழக்கு மாநிங்களில் ஒன்றான ஷில்லாங்கில், இரு சமூகத்தினரிடயே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியுள்ளது.

ஷில்லாங்கைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவரை தெம் லூ மவ்லாங் என்ற பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்து நடத்துனரின் சமூகத்துக்கும் அவரைத் தாக்கியவரின் சமூகத்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலை போலீஸ் தடுத்ததால், கலவரக்காரர்கள் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தினார். இந்த மோதலின் போது, 5 சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், ஷில்லாங் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், இரவு நேரத்தில் வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறியும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கலவரக்காரர்கள் போலீஸை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒரு வீடு, ஒரு கடை மற்றும் 5 வாகனங்கள் சூரையாடப்பட்டன. மேலும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரிக்கும் இந்த சம்பவத்தின் போது காயம் ஏற்பட்டது.

இணைய சேவையும், குறுஞ்செய்தி அனுப்பும் சேவையும் அங்கு தடை செய்து வைக்கப்பட்டு உள்ளது. வதந்திகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>