கலிபோர்னியா தேர்தல் - களம் காணும் இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் கலிபோர்னியா ஆளுநருக்கான தேர்தலில் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட சுபம் கோயல் என்ற 22 வயது இளைஞர், கட்சி சார்பின்றி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருடன் இன்னும் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பொருளாதாரம் மற்றும் திரைப்பட படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள கோயல், கலிபோர்னியா தெருக்களில் மைக்ரோஃபோனில் வாக்குக் கேட்டு வருகிறார். டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமும் தம் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

தன்னை சராசரி மனிதன் என்று அழைத்துக்கொள்ளும் கோயல், "கலிபோர்னியா மாற்றத்துக்காக போராடி வருகிறது; இதுவே மாற்றத்திற்கான தருணம். பல பிரச்னைகளுக்கு தொழில்நுட்பமே தீர்வு தருகிறது. தொழில்நுட்பத்தினால் முடிகிற தீர்வுகளை தரவேண்டும் என்ற ஆசையில்தான் ஆளுநர் பொறுப்புக்கு போட்டியிடுகிறேன்," என்கிறார்.

"அரசியலில் வெளிப்படை தன்மை வேண்டும்," என்று கூறும் சுபம் கோயல், கலிபோர்னியா ஆளுநருக்கு போட்டியிடுபவர்களில் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>