நீட் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியீடு
நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகள் படிப்பதற்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகம் உள்பட கடந்த 6ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் பெரும் துயரத்துடன் தேர்வு எழுதினர். இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதற்கிடையே, வினாத்தாள் குளறுபடி ஆகியவை காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்தனர். இதனால், அறிவிக்கப்பட்டபடி 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இ ணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com