மாப்பிள்ளை முறுக்கு... ஸ்டாலினை கலாயித்த ஜெயக்குமார்
மாப்பிள்ளை முறுக்குடன் புறப்பட்ட ஸ்டாலின் மீண்டும் சட்டசபை திரும்பியதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பயணத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டமன்றம் என்பது மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு, அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், மாப்பிள்ளை முறுக்குடன் புறப்பட்ட ஸ்டாலின் மீண்டும் சட்டசபை திரும்பியதற்கு வாழ்த்து" என்றார்
தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசன் கூட்டத்தில் ஒருவனா..? தனி ஒருவனா...? ஆயிரத்தில் ஒருவனா...? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என விமர்சித்தார்.
அதிமுக-வை கைப்பற்றுவது தொடர்பான தினகரனின் சபதத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் தினகரன் ஆட்சியை பிடிக்க முடியாது’ என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com