எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாளையொட்டி 67 கைதிகள் விடுதலைnbsp
By Isaivaani
எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாளையொட்டி 67 கைதிகள் விடுதலை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.ன் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி எம்.ஜி.ஆர் புகழை பரப்பினர்.
இந்நிலையில் அவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில், ஆயுள் தண்டனை கைதிகள் 67 நபர்களை விடுதலை செய்யவுள்ளதாகவும். 25.02.2018 அன்று யாரெல்லாம் 10 ஆண்டுகள் சிறையில் நிறைவு செய்துள்ளார்களோ அவர்களின் நன்னடத்தை விவரங்களை பெற்று, உச்ச நீதிமன்றத்தின், வழிகாட்டுதலின் படி, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, 67 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com