2 விருதுகள் வாங்கிய நாயகி: ட்விட்டரில் வாழ்த்திய காதலன்nbsp !
By Isaivaani
பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் திரைத்துறை விருதுகள் வழங்கும் விழா ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் அந்த விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.
முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாராவுக்கு 2 விருதுகள் கிடைத்தது. அறம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஒரு விருதும். மக்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற பிரிவில் ஒரு விருதும் கொடுத்து கௌரவித்தது தொலைக்காட்சி நிறுவனம்.
தனது காதலியான நயன்தாரா இரண்டு விருதுகளை வாங்கியது மகிழ்ச்சி என்று ட்விட்டரில் புகழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
"உன்னை நினைத்து பெருமையடைகிறேன். மேலும் வளர வாழ்த்துக்கள். இதயங்களை கொள்ளைகொள்ளும் நயன்தாரா, உனது உழைப்பிற்காக அறம் படத்திற்கு கிடைத்த வெற்றி. அறம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் மற்றொரு ட்விட்டில் "எனது விருதுடன் அவளுடன் விருதுகளும்" என்றும் "நம்ம எப்போ இப்படி அவார்ட் வாங்கி இந்த புள்ள கிட்ட கொடுக்க போறோமோ" என்று (மைண்ட் வாய்ஸ்) பதிவிட்டுள்ளார்.
மேலும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். சூப்பர், திறமையான நடிகருக்கு வாழ்த்துக்கள் என்றும் மேலும், விருது பெற்ற அணைத்து நடிகர் நடிகைகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் ட்விட்ட செய்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com