கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி - கமல்ஹாசன் சந்திப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.

பெங்களூரூவில் முதலமைச்சர் குமாரசாமியின் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கி குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பிறகு பார்போம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும், கமல்ஹாசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, இரு மாநிலங்களிடையே சுமூகமான உறவு நிச்சயம் நீடிக்கும் என்றார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கடந்த 100 வருடங்களாக காவிரி பிரச்சனை நீடித்து வருவதாகவும், இதனை விரைவில் முடித்து வைக்க வேண்டும் என குமாரசாமியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்த கமல், இந்த சந்திப்பு நன்றாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>