10 வயது சிறுமியை கடத்த முயன்ற முகமூடி திருடன்!
உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த10 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமுதம். இவரது பேத்தி தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அதிகாலை குமுதம் வேலைக்கு சென்றுள்ளார். அவரது பேத்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, கைக்குட்டையால் முகத்தை கட்டிக்கொண்டு 30 வயது மதிக்கதக்க ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். மர்ம நபரை பார்த்ததும் சிறுமி கூச்சலிட்டுள்ளார். அலறலை கேட்டு அக்கம்பக்கம் வசிப்பவர்கள் ஓடி வந்தனர்.
உடனடியாக சிறுமியை கடத்தும் முயற்சியை கைவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் அளித்த புகார், அங்க அடையாளங்களை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலாகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com