உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.தா.மோ.அன்பரசன், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது ஏன் எனவும் தேர்தல் எப்போது நடத்தப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டது எனவும் அதனை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது என பேசினார்.

மேலும், மீண்டும் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்பதால் மீண்டும் திமுக நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதாகவும் வேறு சில நிபந்தனைகளுடன் தீர்ப்பு வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்

மத்திய அரசிடம் எல்லை மறுவரையறை தொடர்பாகவும் நிதி தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கூறினார்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>