தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், “அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 29ம் தேதி தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமாத மழை பெய்யக்கூடும். பல நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் ” என்று கூறினார்.

 

 

 

More News >>