கமலின் கட்டிப்பிடி வைத்தியம் அரசியலில் எடுபடாது - ஜெயக்குமார்
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடனான கமலின் சந்திப்பு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
"காவிரி விவகாரத்தில் கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமியை கட்டிப்பிடித்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா...? அடிப்படை விஷயம் கூட தெரியாமல் கமல், ரஜினி பேசுவதை ஏற்க முடியாது" என்றார் ஜெயக்குமார்.
தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச நீதிமன்றத்தை நாடினாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. நிர்வாகத்தில் இருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் இது தெரியும். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது" எனக் கூறினார்.
மாணவர்கள் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கஜினி முகமது போல் படையெடுக்க வேண்டும், தோல்வியில் துவண்டு உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுரை வழங்கியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com