வன்முறைகளை குறைக்கும் வலிமை இசைக்கு உண்டு - இளையராஜா
இசை, கலையால் மட்டுமே நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்னிசை துடிப்பின் நாதமான இளையராஜா, தனது 75 வது பிறந்த நாளை கடந்த சனிக்கிழமை கொண்டாடினார்.
அவரை வாழ்த்துவதற்காக ரஷ்ய கலைஞர்கள் சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் வடபழனியிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை போற்றும் வண்ணம் பல விதமான நடனங்களை ஆடி இளையராஜாவை மகிழ்வித்தனர்.
பின்னர் பேசிய இளையராஜா, “இசையால் மட்டுமே வன்முறைகளை ஒழித்து உலகத்தை அமைதியான பாதைக்கு அழைத்து செல்ல முடியும்” என கம்பீர குரலில் சொன்னார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com