வாட்ஸ் அப் குழு அட்மின்களே.. உஷார்...!
ஹரியானா மாநிலத்தில் வாட்சாப் குழு அட்மின் ஒருவரை 6 பேர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன காலத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு பிரம்மாண்ட உலகம் சமூக வலைதளம். இந்த செயற்கை உலகால் ஏராளமான நன்மை இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகளும் அதிகம் என்றே சொல்லலாம்.
தீமையின் ஒரு அங்கம் தான் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம். அங்குள்ள சோனாபேட்டில் வாட்சாப் குழு அட்மின் ஒருவரை 6 பேர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லவ் ஜோஹர் என்ற புனைப்பெயரில், இவர் வாட்சாப் குழு நடத்தி வந்த நிலையில், அக்குழுவினரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கருத்து மோதல் குறித்து விளக்கம் அளிக்க, அந்த குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.
வாட்சாப் குழு அட்மின் மீது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே வாட்சாப் அட்மின் பலியானார்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com